Friday, October 22, 2021

SSB

குமரன் வேலைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தான். ஒரு மஹாகணம் பொருந்திய கை  மெஷின் , ஒட்டு ஓட்டாக போட்ட பல்வேறு நிறம் கொண்ட துண்டு ஒயர்கள் செலோடேப் ஒட்டி  பலவந்தமாக பிணைத்த ஒரு ஒயர் சுற்று,, மற்றும்  ஒரு பி-எரிய பெரிய அடாப்டர் .. கூடவே...உளி  சுத்தி  அது இது.   .தச்சு சாமான்களும், எலக்ட்ரிக் சமாச்சாரங்களும் ஆக அனைத்தையும் பெரிய  துணிபையில்  சுற்றி.. . சைக்கிளில் ஏற்றியாகிற்று..திண்ணையில் தாத்தா (வீரபத்ர ஆச்சாரி என்று புனை பெயர்..கூப்பிடும் பெயர்...வீரா தாத்தா அல்லது வெறும் தாத்தா...)..ஒரு தட்டியை முடைந்து  சரி செய்து கொண்டிருந்தார்; கையில் ஒரே ஆயுதம், ஒரு கத்தி. ஊடே பளிச்சிட்ட வண்ணம் சீவி  சீர் செய்த வண்ணம் இருந்தது..
. புதர் போன்ற வெள்ளை புருவங்கள், அவர் நிமிராமலேயே இவன்  போக்குவரவுகளை கணித்திருக்க, இவனோ, சரக் சார்க் என்று அவரிடம் மாட்டிக்கொள்ளாமல், உள்ளும் வெளியுமாய்..தயாராகிக்கொண்டிருந்தான்.
 உள்ளே  போய்  சட்டியை எட்டிப்பார்த்தால், ..கொஞ்சம் கஞ்சி..தெரிந்தது "தாத்தாவுக்கு அதை விட்டுடு .போற வழியில், டீயும்  பன்னும்   சாப்டுக்க.. நான் சாயம் நீ வரப்போ  சமைச்சி வச்சிருவேன்.." அவன் அம்மா சொன்னாள்.
நேரமில்லை...பெரியய்யா (பெரியசாமி  என்னும்)..இந்நேரம் அந்த விலாசத்துக்கு போயிருப்பார்.. விரைந்தான்.
இவன் சைக்கிளே அங்கே நிற்கும்போது, ஏற்கனவே அவர் உள்ளே போய்விட்டதை  அந்த பெரிய்ய மோடோரபை க்  உணர்த்தியது..இவன் உள்ளே போய் பதவிசாக நின்றான்..பெரியசாமி இடுப்பில் கைவைத்து, மேலும் கீழுமாக ஒரு வாசற்படியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்....வீட்டு  சொந்தக்காரர், இவர் முகத்தை கவலையுடன்  நோக்கிக்கொண்டிருந்தார் ...பெரியசாமி சொல்லிக்கொண்டிருந்தார் :
" அந்த மாதிரி முடியாது..வாஸ்து பாருங்க..மொத்த வாசலையும் கழற்றி புதிசாய் ..சட்டம் செய்யணும்.."
வீட்டுக்காரர் முகத்தில், அதிர்ச்சி, மிரட்சி.. எரிச்சல்..  . மீண்டும் பெரிய சாமி ,
"இல்லையா ஒன்னு செய்யுங்க.."  இப்போது குமரனை பார்த்து, இதை அளந்து சொல்லு என்கிறார்..குமரன் சட்டென்று அளவு பார்த்து   நீள அகலம்  சென்டிமென்டரிலும் அடியிலும் சொன்னான்.. ஒரு கணக்கு வேகமாக போட்டு..." பேசாம  அலுமினியம் அல்லது ஸ்டீல் சட்டம் இருக்கு அப்படியே சொருகிடலாம்..என்ன சொல்றீங்க?" என்று வீட்டுக்காரரை கேட்டார் . 
குமரனுக்கு நேற்றைய தினம் இந்த முதலாளியுடன்  உலோக சட்டங்கள் செய்யும் ஒரு  இடத்துக்கு போனது நினைவுக்கு வந்தது...
வீட்டுக்காரர், ஒரு முடிவுக்கு வந்தவராக தெரிந்தார்..
"என்னய்யா சொல்றீங்க... ஸ்டீலாம்,ஒருச்சட்டத்தை சரி பண்ண மொத்தத்தையும் பேர்ப்பாராம் ...இதெல்லாம் சரிப்பட்டு வராது...விடுங்க" என்று வெறுப்புடன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே  பெரியசாமி கிளம்பி விட்டிருந்தார்.
குமரன் கொஞ்சம் தயங்கி..அந்த வாசற்படியையும், அந்த வீட்டுக்காரரையும் பார்த்தான்... வெளியே பெரியசாமி காத்துநிற்பது தெரிந்தது.. வம்பு தும்பு வேண்டாம் என்று அவரிடம் வந்து நின்றான்..
சின்ன வேலைதானே அய்யா...என்று மெல்ல ஆரம்பித்து சட்  என்று நிறுத்தி விட்டான்... பெரிய சாமி  தூரப்பார்வையாக   பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு," இந்தா  குமாரு, நான்  பஜார் போகணும் ..நீ  என்ன செய்யிறே, அ ந்த  கை மெஷினை  அந்த ஷெட்டில் திருப்பி கொடுத்துவிட்டு , வாடகை போக மீதி இருந்தா  ஏதாவது சாப்பிட்டுவிட்டு போ. சாயங்காலம் பேசலாம்.." அவர் பைக் போயே  போய் விட்டது.. 
மெஷின்  சத்தம் போக மீதி [ப ணத்தில்  கொஞ்சம் இட்லி சட்னி வாங்கிக்கொண்டு ன வீடு திரும்பினான்.. பையில் இப்போது தச்சு  சாமான்கள் தவிர, சில எலக்ட்ரிக் உபகாரணங்களும்! அடிக்கடி ஆப் ஆகிவிடும் அந்த மெஷினை, பொறுமையாக ரெடி செயது ஓட்ட, பற்றாக்குறை .  இடத்தில, அடாப்டர் வைத்து ஒப்பேற்ற, ..பிய்ந்து போகும்போதெல்லாம், ஒயர்களை   கொறடாவால் திரும்ப முடுக்கி ஓட்ட ,..சில சமயம் அந்த வீட்டு எலக்ட்ரிக் போர்டு இந்த அழிச்சாட்டியம் தாங்காமல் பியூஸ்   போய்விடும் ..அதையும் சரிசெய்ய, என்ற பல சாதனங்கள், இவன் சாகசங்கள்.  .
குமரன் சாதுவான பையன். அதனால், விருப்பு வெறுப்பு எதையும் காட்டுவதில்லை  
வீடு வந்தாயிற்று...பையை ஒருபக்கம் வைத்துவிட்டு, பொட்டலத்தை அவிழ்த்து..."இட்லி சாப்பிடு தாத்தா" என்று அழைத்தான்..தாத்தா இட்லி யில் , தன்னை பற்றி கேள்வி கேட்க மறந் து போவார் என்று நம்பிக்கை..ஆனால், தாத்தாவும்  பேரனும் மெளனமாக ஓரக்கண்ணால் ஒருவரை ஒருவர் எடை போட்டுக்கொண்டிருந்தார்கள்....
கடைசியில் தாத்தா கேட்டே விட்டார்..  "என்ன ஆச்சி போனியே...அதே சூட்டில் வந் துட்டே?"..சூள் கொட்டி மறுப்புறம் திரும்பிக்கொண்டு தலையை மூட்டில் சாய்த்துக்கொண்டான்.."சும்மா சாப்பிடு தாத்தா.." என்றான், 
ஆனால் தன்னையும் அறியாமல் மேலே  கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் வரலானது...
போனஇடத்தில் நடந்தது..அந்த மரச்சட்டம் பற்றி, அதற்கு தன் எஜமானர் அளித்த தீர்ப்பு பற்றி....
பார்த்தா ல், தாத்தா எழுந்து இங்கேயும் அங்கேயுமாக நடமாடிக்கொண்டிருந்தார்..
"கிளம்பு..பலகாரத்தை சாப்பிட்டு முடி... அந்த கோயில் இருக்க தெருதானே ? பக்கம் தான்..வா"
நெற்றியில் பள பளவென்று திருநீறு மின்ன, மனிதர் , எங்கிருந்தோ ஒரு நல்ல வேஷ்டியும்   கைவைத்த ஜிப்பாவுமாக நின்றிருக்கிறார்..
"என்ன தாத்தா..?" கலவரத்துடன் பேரன். "போக்கத்தவனுங்களே...நம்ப தொழிலை செய்வீர்களா. என்னவோ பைப்பு   மெஷினுன்னு   கண்டதில் கை  வைப்பீங்களா... கிளம்பு என்றுகொண்டே..அவன் சைக்கிள்  ப க்கம் போ ய் நின்றுகொண்டிருந்தார்..
எங்கே தாத்தா..? என்ன...?  தாத்தா...அந்த ஆள்  ஜோ லிக்கு போக வேண்டாம்...விட்டுடு...நாம் தலையிட்டால் என் பிழைப்பே போய்விடும்.."
சொன்னானே தவிர..அவனும் சைக்கிளருகே வந்துவிட்டான்..தாத்தா கேரியரில் ஏறி ஜம்மென்று அமர்ந்து இருந்தார். விட்டத்தில் இருந்த தன்  சாமான் பையை  மடியில் வைத்துக்கொண்டு , "ம்ம்ம்" என்கிறார்..அதிகாரமாக.  தயங்கினானே  தவிர, அவனும் சைக்கிளில் ஏறிவிட்டாலன் ,  ஆனால்,மீண்டும் வாய் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருந்தது..வீரபத்திர ஆச்சாரி எனப்படும் வீரா தாத்தா..பதிலே சொல்லவில்லை..அவர் கை  மட்டும் ஒரு வீச்சில் அவன் கேள்விகளை ஓரம் கட்டி, போகும் திசையை நோக்கி திண்ணமாக காட்டியவண்ணம்  நின்றது...
அவர் இருக்கை தான்  தேர்தட்டு.  தேரோட்டி இல்லை ஆனால் வழிகாட்டி.  இனி இந்த ஜோடி அடிக்கடி வெளியில் தென்படும். ... .வெரி பிசி!



--
umadevi

No comments: